M.K.Stalin (@mkstalin )

M.K.StalinBio President, Dravida Munnetra Kazhagam (DMK) | Leader of Opposition, Tamil Nadu Legislative Assembly | MLA, Kolathur Constituency.
Tweets 2,7K
Followers 1,2M
Following 73
Account created 29-10-2013 15:11:22
ID 2163039523


iPhone : அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்த ஆணவப் பேச்சுக்கு,

அணி வகுத்து வரும் அவருடைய ஊழல் வழக்குகளே விரைவில் பதில் சொல்லும்!

iPhone : நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, ஊழல் பண மூட்டைகளில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் - ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்து, ஊழலில் சிக்கி நீதிமன்ற வாசலில் தொங்கிக் கொண்டிருப்பதன் விளைவே இந்த பதற்றம் நிறைந்த பேச்சு!

Android : தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, "ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்" என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது.

கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வீ.சேகர் - உயர்நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்?

Android : PM Modi promised a transparent, corruption free government but former French President Hollande's interview shows that the Rafale deal is suspect.

The PM is accountable to the people of India. A full fledged enquiry should be ordered to find the truth.
#ModiRafaleLiesExposed

Android : அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் Sathiyan Gnanasekaran அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்!

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தன் இலக்காக கொண்டிருக்கும் சத்யன், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்!

Android : ஆடிட் அதிகாரி “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அறிக்கை கொடுத்த பிறகும், அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என மூடி மறைக்க முயற்சிக்கிறார்!

தைரியமிருந்தால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுக!

Android : “காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்து விட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது!

இதோ, ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிடுகிறேன்!

அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?

Android : Congratulations and good wishes to #TheHinduat140 The Hindu.
This iconic national newspaper from TamilNadu continues to be the most trusted platform for credible news and progressive perspectives.

iPhone : மின்துறையில் என்ன தவறு நடந்தாலும், தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, “போலி கணக்கு காற்றாலை மின்சார ஊழல்” பற்றி வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்?

இப்படியொரு ஊழலுக்கு துணைபோன அமைச்சர் தங்கமணி உடனடியாக பதவி விலகி, நியாயமான விசாரணைக்கு வழிவிட வேண்டும்!

iPhone : தமிழகமே மின்வெட்டால் தத்தளிக்கும் போது, தூத்துக்குடி வட்டத்தில் உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக போலியான கணக்குக்காட்டி பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கும் அவலம்!

காற்றாலை மின்சார ஊழல் குறித்து உடனே, லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

Android : நீயா? நானா? என போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்யும் ஊழல் பேர்வழிகளான முதலமைச்சர் - துணை முதலமைச்சர் - அமைச்சர்கள் - அவர்களுடைய உறவினர்கள் – பினாமிகள், இதற்குத் துணை போய்க் கொண்டிருக்கும் அதிகாரிகள் என அனைவரும் தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் சிறைக்குச் செல்வார்கள்!

Android : நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான “ஊழல் அ.தி.மு.க” அரசை தூக்கியெறிவதற்கான முன்னோட்டமாக தி.மு.கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்!

Twitter Web Client : சேலத்தில் நடைபெற்று வரும் ஊழலின் மொத்த உருவமான எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
pscp.tv/w/bnB-qjMxNzMx…

iPhone : மதவெறி சக்திகளின் பின்னணியில் இதுபோன்ற இழிவான - தரங்கெட்ட செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை ஒட்ட நறுக்க வேண்டியது நம் கடமை!

ஆகவே, உடனடியாக அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதோடு, இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!

iPhone : சுயமரியாதை வெளிச்சம் பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழ்நாடே நன்றி செலுத்துகிற நேரத்தில்,

சமூகநீதிக் கொள்கையை தகர்த்து, ஒற்றுமை உணர்வை குலைத்து - மதவாதப் பேயாட்டம் ஆட நினைக்கும் மூடர்கள் பெரியார் அவர்களின் சிலையை அவமானப்படுத்த முயற்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது!

iPhone : பாமரருக்காகவே வாழ்நாளெல்லாம் வாதாடிய வழக்கறிஞர்.

சமூகத்தின் நோய்களை எல்லாம் அடையாளம் கண்டு குணப்படுத்திய மருத்துவர்.

தமிழர்களை தடி கொண்டு எழுப்பிய கொள்கைச் சூரியன்.

சரி எது, தவறு எது என்று காட்டிய கலங்கரை விளக்கு.

அய்யாவுக்கு நிகர் யார்?
வாழ்க தந்தை பெரியார்! #HBDPeriyar140

Android : விழுப்புரத்தில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், மத்திய பாசிச ஆட்சிக்கும், மாநில ஊழல் ஆட்சிக்கும் முடிவு கட்டும் இலக்கை நோக்கி, எந்த தேர்தல் களம் வந்தாலும் வெற்றி உதயசூரியன் சின்னத்திற்கு கிடைக்க தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் ஒய்வெடுக்காமல் உழைக்க தயாராக வேண்டுமென்றேன்.

Twitter Web Client : தலைவர் கலைஞர் அவர்களின் நினைவுகளை ஏந்தி விழுப்புரத்தில் நடைபெற்று வரும் தி.மு.கழகத்தின் முப்பெரும் விழா! pscp.tv/w/bm0A2DMxNzMx…

Android : On the #InternationalDayofDemocracy, we resolve to defend the freedom and rights guaranteed by our #Constitution.

Given how attempts are being made to silence activists and dilute institutions today, the fight for free voice must be renewed on #DemocracyDay.